“Let everything that has breath praise the LORD. Praise the LORD.” (Psalm 150:6).
Praise is indeed important in the Bible, and there are numerous verses that highlight its significance. Praise is a way to express gratitude, honor, and reverence to God. It acknowledges His greatness, faithfulness, and power.
1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000
901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம்
902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்
903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம்
904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம்
905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம்
906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம்
907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம்
908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம்
909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது.
அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம்
910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம்
914. சூரிய சந்திர நட்சத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம்
915. நீர்வாழும் மிருகங்கள், பறவைகள், மற்றும் மீன்களுக்காக ஸ்தோத்திரம்
916. பறவைகள், வீட்டு மிருங்கள், காட்டுமிருகங்கள், ஊரும் பிராணிகளுக்காக ஸ்தோத்திரம்
917. மண்ணினாலே மனிதனை உருவாக்கி, ஜீவசுவாசத்தைக் கொடுத்து, ஏற்றத்துணையையும் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
918. நீர் திட்டம் பண்ணின காலங்களுக்காக, மழைக்காக, பனிக்காக, வெயிலுக்காக, நீருற்றுகளுக்காக ஸ்தோத்திரம்
919. ஆறுகளுக்காக, ஓடைகளுக்காக, ஏரிகளுக்காக, குளங்களுக்காக நீர்வீழ்ச்சிகளுக்காக, நீரூற்றுகளுக்காக ஸ்தோத்திரம்
920. மலைகளுக்காக, குன்றுகளுக்காக, மேடுகளுக்காக, பள்ளதாக்குகளுக்காக, சமபூமிகளுக்காக, பாலைவனங்களுக்காக, பனிப்பிரதேசங்களுக்காக ஸ்தோத்திரம்
921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடி கனிமர ங்களுக்காக, எண்ணெய் ஊற்றுக்களுக்காக எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம்
எங்கள் இரட்சகராகிய இயேசுவே, உமது அற்பதங்களுக்காக ஸ்தோத்திரம்
922. தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்
923. பிறவிக் குருடர், செவிடர் ஊமையானவர்களை காணவும் கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம்
924. முடவர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்படையோர், திமிர்வாதக்காரரை சுகமாக்கினீர் ஸ்தோத்திரம்
925. பிசாசின் வல்லமையில் பிடிபட்டிருந்தோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம்
926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம்
927. மரித்த லாசரு, யவீருவின் மகள் நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடெழுப்பினீர் ஸ்தோத்திரம்
928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம்
929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம்
930. உமது வார்த்தைப்படி ஆழத்திலே வலை போட்ட போது திரளான மீன்களும், மற்றோரு முறை வலது பக்கத்திலே வலை போட்ட போது, 153 பெரிய மீன்களும் படிக்கச் செய்த அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்
931. வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் பேதுருவின் மாமியையும், 38 வருடமாய் வியாதியாயிருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
933. 5 அப்பம் 2 மீன் கொண்டு 5000 பேருக்கும் மேலானவரை போஷித்து மீதியானதை 12 கூடைகளில் நிரப்பச் செய்தீர் ஸ்தோத்திரம்
934. 7 அப்பமும் சில சிறு மீன்களும் கொண்டு 4000 பேருக்கும் மேலாக போஷித்தீர் ஸ்தோத்திரம்
935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தீர் ஸ்தோத்திரம்
936. உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்பதமாய் நீர் மறைந்து போனீர் ஸ்தோத்திரம்
937. உம்மை பிடிக்க வந்த போர்ச்சேவகரின் கூட்டத்தை பின்னிட்டு விழச்செய்தீர் ஸ்தோத்திரம்
938. சந்திரரோகியையும் நீர் கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
939. அத்திமரம் உமது சாபத்தால் உடனே பட்டுப்போனது ஸ்தோத்திரம்
940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை பதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான இந்த உம் அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்
வேதத்தில் உள்ள உம் வாக்குத்தத்தங்களுக்காக ஸ்தோத்திரம்!
941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்பவிப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
943. அவர் செட்டைகளின் கிழ் அடைக்கலம் பகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
944. இரவில் உண்டாக்கும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது பறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
946. பெல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
947. உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காய்த் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
948. உன் பாதம் கல்லில் இடறாதபடி (தூதர்கள்) தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
949. சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
950. என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறவனை விடுவிப்பேன் என நாமாத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்பவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
952. நீடித்த நாட்களால், அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குள்ள ஆசீர்வாதங்கள் (954 – 958)
954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
955. உனக்குப் பாக்கியமும் நன்மையும் உணடாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சக் கொடியைப் போலிருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
957. உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
960. உன் சந்ததி மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
962. உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள. உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
963. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று உம்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
964. என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என பலம் பூரணமாய் விழங்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
965. இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
968. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப் படுத்துவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
969. எனனை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
971. தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
973. இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
977. என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
980. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
981. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உனனைக் கைவிடுவதுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
982. நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீஙகள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
985. யாக்கோபக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
986. ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
987. இதோ, என் உள்ளங் கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
989. நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றீர் ஸ்தோத்திரம்
990. நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்றீர் ஸ்தோத்திரம்
991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
994. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்
998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் ஆயத்தம் பண்ணின பின்பு… நான் மறபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்
1000. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்